News November 15, 2025
சிவகங்கை விபத்து; அதிர்ச்சியூட்டும் தகவல்.!

திருப்புவனம் அருகே, போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் TN23G0787 இன்சூரன்ஸ் கடந்த 11-2-2018 அன்றுடன் நிறைவடைந்துள்ளதும்,
எப்.சி காலாவதியான நிலையிலும் ஓடிக்கொண்டிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 17, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்
News December 17, 2025
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்?

ஆ.தெக்கூர், கீழ்ச்செவல்பட்டி, திருப்பத்தூர், காளையார்கோவில், மதகுபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக எஸ். எஸ். கோட்டை, நெற்குப்பை, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, நெடுமறம், பிள்ளையார்பட்டி, தென்கரை, புலியடிதம்பம், சருகணி, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 17, 2025
சிவகங்கை: ஒரே நாளில் 3 பேர் மீது குண்டாஸ்!

கிழவனுார் பகுதியை சேர்ந்த சற்குனம் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அரிராஜ், மாதவன் ஆகிய இருவரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர். மேலும் வைரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி கடந்த மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வேண்டுகோள் அடிப்படையில் மூவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.


