News October 13, 2025
சிவகங்கை: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சாக்கோட்டை போலீஸ் சரகம் பிரம்புவயல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் தனது வீட்டின் பின்புறம் தள்ளுவண்டியில் வைத்திருந்த பொருட்களை தள்ளிச்சென்ற போது வண்டி மின்சார வயரில்பட்டு முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரை காப்பாற்ற முயன்ற அவருடைய தந்தை காளியப்பன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 14, 2025
சிவகங்கையில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

சிவகங்கை மக்களே, ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
சிவகங்கை: கோவிலில் உண்டியல் திருட்டு.!

இளையான்குடி அருகே குறிச்சி கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு வந்த சுப்பிரமணியன் என்பவர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இளையான்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு திருடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 14, 2025
சிவகங்கை: லைன் மேனை தேடி அலைய வேண்டாம்.!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


