News November 21, 2024

சிவகங்கை நகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

image

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என சிவகங்கை நகராட்சி, மாவட்ட ஆட்சியர், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் பதில் அளிக்காவிட்டால், அதிக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

சிவகங்கை: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு<> கிளிக் செய்து<<>> TNEB பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவிக்கவும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News November 9, 2025

திருப்புவனத்தை சேர்ந்த நபர் இறுதிப்போட்டிக்கு தேர்வு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த உச்சி மாகாளியம்மன், கோயில் தெருவில் வசிக்கும் ஆதித்யன், மதுரையில் நடந்த முதியோர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அத்துடன் சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று சிவகங்கை, மாவட்டம் சார்பாகவும் திருப்புவனம் பகுதி சார்பாக அனைத்து பொதுமக்களும் அவரை வாழ்த்தினர்.

News November 9, 2025

சிவகங்கை: ரூ.3 லட்சம் மானியம்; ஆட்சியர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!