News August 23, 2024

சிவகங்கை எம்.பி தெரிவித்த விமர்சனம்

image

சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “விஜய் கட்சி கொடி ஏற்றினால் மட்டும் போதுமா? கொள்கை என்ன?; அரசை நடத்தி விடலாம்; அரசியல் கட்சிகளை நடத்துவது எளிதல்ல; கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களை விட தோல்வியடைந்தவர்களே அதிகம்; தமிழ்நாட்டில் அதிமுக தான் 2 வது பெரிய கட்சி, பாஜக அல்ல; காங்கிரஸ் 2ஆம் இடத்தை பிடிக்க கட்சியின் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும்”என கூறியுள்ளார்

Similar News

News December 9, 2025

சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE IT.

News December 9, 2025

மானாமதுரை: டூவீலர் விபத்தில் சிறுவன் பலி

image

மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் அய்யனார் (17), நேற்று இருசக்கர வாகனத்தில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் வந்த போது சர்வீஸ் ரோட்டிலிருந்து மேம்பாலத்திற்கு ஏற போடப்பட்டிருந்த இரும்பிலான படிக்கட்டில் எதிர்பாராத விதமாக மோதியதில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

சிவகங்கை: நாதக வேட்பாளர் புகார்; ஆட்சியர் விளக்கம்

image

சிவகங்கையில் நாதக வேட்பாளர் மற்றும் அவரது கணவர் பெயர் SIR-ல், இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் உடனடியாக சரி செய்யப்படும் என சிவகங்கை ஆட்சியர் விளக்கம் தெரிவித்துள்ளார். Check list என்பது இப்பணியில் உள்ள குறைகளை களைவதற்காக வழங்கப்பட்ட விவரங்கள்தான். இது இறுதிப்பட்டியல் அல்ல என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!