News May 14, 2024

சிவகங்கை அருகே மழை

image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் ஒரு வாரமாக மழையின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று திடீரென மழை பெய்தது. லேசாக ஆரம்பித்த சாரல் மழை மெல்ல மெல்ல  கனமழையாக பெய்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் மகிழ்விக்கும் என நினைத்த நிலையில், வந்த மழை 10 நிமிடத்தில் நின்றது. இதனால் மழை வந்தது விழுந்தது ஏமாற்றி சென்றாக பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

Similar News

News December 8, 2025

சிவகங்கை: கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.!

image

தேவகோட்டை அருகே உள்ள விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சருகனி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!