News August 6, 2024
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஆக.9 அன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு, ஐடிஐ. டிம்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 14, 2026
சிங்கம்புணரி: தொடர் ஸ்கூட்டர் திருட்டில் புதிய திருப்பம்…

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்த 38 வயது கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய முயன்ற போது அவர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பல ஸ்கூட்டர்கள் மற்றும் ரூ.3,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 14, 2026
சிவகங்கை : போஸ்ட் ஆபீஸில் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <
News January 14, 2026
சிவகங்கை ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம், பேருந்து பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


