News June 18, 2024

சிறுவனிடம் நலம் விசாரித்த மேயர் பிரியா

image

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் நேற்று இரவு 6 வயது சிறுவனை தெருநாய் கடித்தது. இதில் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அச்சிறுவனை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அச்சிறுவனுக்கு உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

Similar News

News January 20, 2026

சென்னை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

சென்னைமக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 20, 2026

டெலிவரி நபர் மீது தாக்குதல் – EPS கண்டனம்

image

சென்னை வேளச்சேரியில் ZEPTO மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் பார்த்திபன் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிவு செய்துள்ளார். “இன்னும் எத்தனை முறை தமிழக மக்கள் இப்படிப்பட்ட கொடூர காட்சிகளை காண வேண்டும் முதல்வர் அவர்களே” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 20, 2026

மெரினாவில் பரபரப்பு!

image

திருச்சியை சேர்ந்த சண்முகவேல் (38) மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்து சண்முகவேலிடம் தகராறு செய்துள்ளனர். அவரை அடித்து உதைத்து அவர் வைத்திருந்த ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். படுகாயம் அடைந்த சண்முகவேல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த முருகா (31) என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!