News August 20, 2024
சிறுமி வன்கொடுமை- உதவி பயிற்சியாளரை தேடும் போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் தனியார் பள்ளியில் என்.சி.சி பயிற்சி முகாமிற்கு சென்ற 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதில் போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், இதனுடன் இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேரை இதுவரை கைது செய்துள்ளன்னர். இந்நிலையில் இதில் தொடர்புடைய உதவி பயிற்சியாளர் சுதாகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
கிருஷ்ணகிரி சாலையில் கோர விபத்து!

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை கிராமத்தை சேர்ந்த ராஜா 29 என்பவர் நேற்று ஜன-17 காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 18, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி.17) ’சாலைவிதிகளை கற்றுத்தருவோம் நமது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.