News August 4, 2024
சிறுமியின் தந்தையை கொலை செய்து விட்டு சிறுமி கடத்தல்

J.காருப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த முனிராஜ் என்பவரது 17 வயது மகளை காதலித்த அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்ராஜ் 6 மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறை சென்று வெளி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு 2 மணியளவில் வெங்கட்ராஜ் நண்பருடன் முனிராஜை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு அவரது மகளை அழைத்துக் கொண்டு தப்பியுள்ளார். வெங்கட்ராஜ் மற்றும் அவரது நண்பரை கெலமங்கலம் போலிசார் தேடி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
ஓசூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி பயங்கர விபத்து

ஒசூா் பத்தலப்பள்ளியில் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அடுத்தடுத்து 3 காா்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 3 காா்களும் சேதமடைந்தன. வாகன நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவா்களின் இடையே புகுந்து சென்றனா். ஒருமணி நேரத்துக்குப் பிறகு விபத்தில் சிக்கிய ஒரு காரை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது
News January 24, 2026
கிருஷ்ணகிரி: 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கெலமங்கலம் அடுத்த யு.புரம் கிராமத்தை சேர்ந்த சுஸ்மிதா(15), 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு பள்ளிக்கு செல்லலாம் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜன-23 வீட்டில் தனியாக இருந்த சுஸ்மிதா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
ஓசூரில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

ஓசூர் காந்தி நகரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்த பச்சிளம் ஆண் குழந்தை, கடந்த ஜனவரி 22-ஆம் தேதி உயிரிழந்தது. தேன்கனிக்கோட்டை கொல்லப்பள்ளியைச் சேர்ந்த ரூபத் -ஞான எஸ்தர் தம்பதியினரின் இக்குழந்தை, பால் குடித்துவிட்டு உறங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


