News June 17, 2024

சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

image

பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை நகரில் உள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் இன்று ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

Similar News

News January 24, 2026

சிவகங்கை: பெண் தற்கொலை!

image

கல்லல் அருகே குருந்தபட்டு பகுதியை சேர்ந்த கருப்பையா – மல்லிகா (56) தம்பதியினர். இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மல்லிகா ஜன. 22 அன்று அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். அவரை மீட்டு செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

சிவகங்கை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா சிவகங்கை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04575-240524 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

News January 23, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (23.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!