News May 7, 2025
சித்திரைத் திருவிழா போக்குவரத்து மாற்றம்

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.
Similar News
News December 7, 2025
மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


