News February 23, 2025
சிதம்பரம் அருகே எந்திரம் கவிழ்ந்து மாணவன் பலி

சிதம்பரம் அருகே புதுச்சித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் நேற்று மாலை வயலில் உழவு எந்திரம் தில் அமர வைத்து எந்திரத்தில் சுற்றி வந்தனர் எதிர்பாராத விதமாக எந்திரம் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார் அதில் ஒருவர் படுகாயம் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர் சிகிச்சை பலன்னிறி உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Similar News
News July 9, 2025
ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வுக்குபின் பதில் – ஆட்சியர்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை தடுக்க ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அளித்த பதிலில் “தெற்கு ரயில்வேயின் குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுக்குப் பின் பதில் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
News July 9, 2025
கடலூர்: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடலூர் ரயில் விபத்து குறித்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
News July 9, 2025
கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.