News November 28, 2024
சாலை வளைவுகளில் அதிக வேகம் கூடாது: கலெக்டர் அறிவுரை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணியவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
Similar News
News November 8, 2025
வெள்ளகோவில்: விஜயகாந்த் நிலம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈரோடு(கி) தொகுதி MLA சந்திரகுமார். இவர், 2005ல் தேமுதிக-வில் இருந்தார். அப்போது, விஜயகாந்த் ஏழை மக்களுக்கு வழங்கும் வகையில், வெள்ளகோவில் அருகே 3ஏக்கர் நிலம் வாங்கினார். அப்போது சந்திரகுமார் மீது அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. 2016ல் சந்திரகுமார் திமுகவுக்கு மாறினார். இந்நிலம் குறித்து தேமுதிக சார்பில் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நிலத்தை திரும்ப வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
News November 8, 2025
திருப்பூர்: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

திருப்பூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
திருப்பூரில் இருவர் அதிரடி கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் குளத்துப்பாளையம் சோதனை சாவடியில், சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தீபக் குமார்(25) மற்றும் ரவி பட்டேல்(23) என்பதும், இவர்களிடம் 650 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


