News April 8, 2024
சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலி

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மகாராஜா. இவர் நேற்று கோவில்பட்டி வந்துவிட்டு ஊர் திரும்புவதற்காக தனது உறவினர் புவனேஸ்வரன் உடன் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது கார் ஒன்று மோதி காயமடைந்த இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 10, 2025
தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வேல்குமார் (27). இவருக்கும் புனிதராஜிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு திசையன்விளை ரோடு பகுதியில் புனித ராஜ் அவரது அண்ணன் நாகராஜ் (28) இருவரும் வேல்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த வேல்குமாரை உயிரிழந்தார். இதுகுறித்து குலசை போலீசார் வழக்குபதிவு செய்து புனிதராஜ், நாகராஜை தேடி வருகின்றனர்.


