News August 21, 2024
சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு

ராமநாதபுரம் வெளிபட்டணம் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய பெத்துலட்சுமி லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் படி 19.10.23 இல் இடைத்தரகர்களிடம் ரூ.1,84,500 பெற்ற போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பெத்துலட்சுமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய், ஆவணங்களை கைப்பற்றினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பெத்துலட்சுமி மீது இன்று மேலும் ஒரு வழக்கு பதிவவாகியுள்ளது.
Similar News
News January 17, 2026
ராம்நாடு: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி!

முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (24). இவர் நேற்று முதுகுளத்தூரில் இருந்து உத்திரகோசமங்கை கோயிலுக்கு சென்றுள்ளார். தேரிருவேலி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் திலீப் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த திலீப் மதுரை தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், திலீப் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேரிருவேலி போலீசார் விசாரனை.
News January 17, 2026
ராமேஸ்வரத்தில் 14 மீனவர்கள் சிறைபிடிப்பு!

காரைக்கால் மீனவர்கள் ராமேஸ்வர கடல் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்களுக்கு மீன்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் கடல் பகுதியில் காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் அறிந்த ராமேஸ்வர மீனவர்கள் 50 பேர் 4 படகில் சென்று, காரைகால் மீனவர்கள் 14 பேரை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
News January 17, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


