News November 19, 2025

சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

image

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

Similar News

News January 17, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 583 ▶குறள்: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். ▶பொருள்: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

News January 17, 2026

IND vs NZ: அணியில் அதிரடி மாற்றம்

image

NZ-க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 2 வீரர்களை BCCI மாற்றியுள்ளது. அதன்படி, வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னோய், திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: சூர்யா (C), அபிஷேக், சாம்சன், ஸ்ரேயஸ், ஹர்திக், துபே, அக்சர், ரிங்கு, பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், குல்தீப், வருண், இஷான், ரவி பிஷ்னோய். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடர் 21-ம் தேதி தொடங்குகிறது.

News January 17, 2026

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி

image

மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘Composite Salary Account Package’ -ஐ நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கி, காப்பீடு சேவைகள் ஒரே கணக்கின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு பல புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரிவு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடாக ₹1.5 – 2 கோடி, ஊனம் ஏற்பட்டால் ₹1.5 கோடி வழங்கப்படும். மேலும், வீடு, கல்வி, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டிவிகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!