News November 14, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

பழம்பெரும் பாலிவுட் நடிகை காமினி கௌசல்(98) காலமானார். 1946-ல் NEECHA NAGAR படத்தின் மூலம் திரையுலகில் அவர் அறிமுகமானார். இந்தியாவில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே கான் பட விழாவில் Palme d’Or விருது வென்றுள்ளது. திலீப் குமார் உள்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த காமினி, கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News December 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 7, கார்த்திகை 21 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 1.30 PM – 2.30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News December 7, 2025
ஷேக் ஹசினா எத்தனை நாள் இந்தியாவில் இருப்பார்?

ஷேக் ஹசினா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளார். அந்த காரணங்கள் சரியாகும் வரை இங்கு இருப்பது அல்லது திரும்பி செல்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதேவேளையில், வங்கதேசத்தின் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை இந்தியா ஆதரிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


