News August 5, 2024

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ஆண்டனி

image

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் தொடக்கத்தில் இயக்குனர்களை கேட்காமல் ஒரு காட்சியை இணைத்ததற்கு நடிகர் விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களும் இயக்குனரும் கலந்து பேசி இன்று முதல் அக்காட்சிகள் திரையரங்குகளில் நீக்கப்பட்டு பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது என்றும் மக்கள் மகிழ்ச்சியாக சென்று திரைப்படத்தை பார்க்கலாம் எனவும் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

சென்னையில் வாலிபர் தீயிட்டு தற்கொலை!

image

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், அந்த அறைக்குள் இருந்த அடையாளம் தெரியாத வாலிபர், தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், அவருடைய விவரம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

News January 22, 2026

தனிச் சின்னத்தில் போட்டி – ஜி.கே.வாசன்

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜக தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், 20ம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். அவரை, ‘NDA’ கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கத்தில் தங்கியிருக்கும் பியூஷ் கோயலை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் தேர்தலில் தமாக தனிச் சின்னத்தில் போட்டியிடும்” என்றார்.

News January 22, 2026

சென்னை: உங்களிடம் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!