News March 28, 2024
சமூக வலைத்தளங்களில் அவதூறாக பிரச்சாரம்

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் கௌதமன் என்பவருக்கு சொந்தமான தனியார் ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட பிரியாணியின் அளவு குறைவாக உள்ளதாக கூறி சண்டைபோட்டு, சமூக வலை தளங்களில் ஓட்டல் வாசலில் பிரியாணியை கொட்டி எடுத்த வீடியோவை அவதூறாக பரப்பி பிரச்சாரம் செய்த தினேஷ், சூர்யாதி , திருமுருகன் மீது ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம்

புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் காந்தி வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி வைத்திலிங்கம் தலைமை வகித்தார். இதில் புதிய வழித் தடங்களில் விமானங்கள் இயக்குவது, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், விமான நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறுவது, விமான பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
News January 21, 2026
புதுவை: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT
News January 21, 2026
புதுவை: கோயில் உண்டியலில் பணம் திருட முயற்சி

காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், கைலாசநாதர் கோயிலில் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோயிலைச் சுற்றி வந்தபோது, தண்டாயுதபாணி சுவாமி சன்னதியில் உள்ள ஒரு உண்டியலில் இருந்து இரண்டு நபர்கள் சுவிங்கம் தடவிய குச்சி மூலம் பணத்தைத் திருட முயல்வதைக் கண்டுள்ளார். அவர்களைக் கோயில் ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


