News August 5, 2024
சமூக நீதிக்கு எதிரானது திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்

சென்னை தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “பட்டியலின சமுகம், வன்னியர் சமூகம் இந்த இரண்டு பெரிய சமூகங்களும் முன்னேறினால் தான் சமூகம் முன்னேறும். 1989-இல் 107 சமுதாயங்கள் தான் MBC-இல் இருந்தது. இப்போது 115 சமூகங்கள் உள்ளன. அதில், 114 சமுதாயங்கள் தமிழக மக்கள் தொகையில் 6.7% மக்கள் தொகையில் உள்ளன. சமூக நீதிக்கு எதிரான செயலை திமுக அரசு செய்து வருகிறது” என்றார்.
Similar News
News January 19, 2026
சென்னை: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு…

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News January 19, 2026
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக’ என்றார்.
News January 19, 2026
JUST IN: சென்னையில் போலீசார் குவிப்பு

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னையில் சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.


