News April 12, 2024
சமத்துவ நாள் உறுதிமொழி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முகமது உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
சென்னிமலை அருகே பள்ளி மாணவன் விபரீத செயல்

சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி, ஒட்டங்காடு கோபால்-திவ்யா தம்பதியின் மகன், கெளரிஸ் (12) தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு கட்டு தரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 10 நிமிடம் கழித்து சிறுவனின் அம்மா வீட்டுக்கு பின்புறம் உள்ள கட்டுத்தரைக்கு சென்று பார்த்தபோது வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 12, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம்-1930 மற்றும் குழந்தைகள் உதவி-1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 12, 2025
அம்மாபேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

அம்மாபேட்டை வட்டார பகுதி மக்களுக்காக இன்று (12/11/25) புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆனைகவுண்டனுார், ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம்
வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


