News August 20, 2024
சத்தியமங்கலத்தில் உங்களை தேடி திட்ட முகாம்

ஈரோடு, சத்தியமங்கலம் தாலுக்காவில் நாளை (21.8.24) மற்றும் ஆகஸ்டு 22ஆம் தேதி உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒரு நாள் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை மாலை பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
ஈரோட்டில் கேஸ் புக் பண்ண புது வழி!

ஈரோடு மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
தாளவாடி மலைப் பகுதியில் பெரும் சேதம்!

ஆசனூர் வனக்கோட்டம் சீரகல்லி வனசரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி சுற்று வட்டார பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்கள், கரும்பு, வாழை ஏனைய விவசாய பொருட்கள் விவசாய உபகரணங்கள் போன்றவற்றை அனுதினமும் சேதம் விளைவித்து வருகிறது. யானைகள் வனத்தை விட்டு வெளியேறாது தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
News January 15, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் சாதாரண விசைத்தறிகளில் ரேப்பியர் உபகரணங்களைப் பொருத்தவும், புதிய ரேப்பியர் தறிகளை விநியோகிக்கவும் விருப்பமும் அனுபவமும் உள்ள விநியோகஸ்தர்கள் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (அ) 9894360232 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


