News April 12, 2024

சட்டென்று மாறுது வானிலை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் கொடக்கானல் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News November 8, 2025

திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சிறுவன் உட்பட 3 பேர் கைது!

image

திண்டுக்கல்: சிறுமலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) விளையாட்டு போட்டி நடத்தினார். அப்போது, சிவா (22), பிரகாஷ் (27) ஆகியோர் கேலி செய்தனர். இவர்களுக்கும் சுரேஷ் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இரவு சுரேஷ் வீட்டில் சிவா, பிரகாஷ், 14 வயது சிறுவன் சென்று பெட்ரோல் குண்டு வீசினர். சுரேஷ் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது கொலை மிரட்டல் விடுத்தனர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News November 8, 2025

வேடசந்தூர் அருகே 24 வயது வாலிபர் விபரீத முடிவு!

image

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு, முருநெல்லிக்கோட்டை பகுதியில் பழையகோட்டையைச் சேர்ந்த சண்முகம் மகன் பூபதிராஜா (வயது 24) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலையம் விரைந்து சென்று, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 7, 2025

திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (நவ-07) சமூக வலைதளம் மூலம் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுஇடங்களில் இலவச Wi-Fi இணைப்புகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தது. இல்லையெனில் செல்போன்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!