News June 17, 2024
சசிகலாவால் அதிமுக பொது செயலாளராக முடியுமா?

மீண்டும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள சசிகலாவின் குறிக்கோள், அதிமுக தலைமை பதவிதான் என்பது அறிந்ததே. ஆனால் அவர் நினைப்பது போல அப்பதவிக்கு மீண்டும் வர முடியுமா? இதற்கு இபிஎஸ்ஸை எப்படி சரி கட்டுவார்? வழக்கு தொடுப்பாரா? இபிஎஸ் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுப்பாரா? என்ற கேள்விகளுக்கு விடை காண்பதை பொறுத்தே அதிமுக தலைமைப் பதவி அவர் வசம் வருமா, இல்லையா என்பது தெரியவரும்.
Similar News
News January 13, 2026
இந்தியா மீது மேலும் 25% வரி.. USA-ன் முடிவு

ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாக கூறிய அவர், இதுவே இறுதியான முடிவு எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனா, இந்தியா, UAE, துருக்கி ஆகிய நாடுகள் USA உடன் வர்த்தகம் செய்யும்போது அதிக வரிச் சுமையை சுமக்க நேரிடும். எனவே, இந்தியாவில் பொருள்களின் விலைவாசியும் உயரலாம்.
News January 13, 2026
140 வருடங்கள் ஓடும் யூடியூப் வீடியோ!

கடந்த 5-ம் தேதி, யூடியூப்பில் 140 ஆண்டுகள் நீளம் கொண்ட வீடியோ ஒன்று Upload செய்யப்பட்டுள்ளது. கிளிக் செய்தவுடன், 12 மணி நேரமாக குறைந்தாலும், உள்ளே வீடியோ, ஆடியோ எதுவும் இல்லை. வெறும் Blank Screen மட்டுமே. இந்த சேனலில் 294 hours, 300 hours வீடியோக்களும் உள்ளன. ஏதாவது டெஸ்ட் சேனலாக இருக்கலாம் என கூறினாலும், ‘Come, meet me in hell’ என்ற Video description குழம்ப செய்கிறது.
News January 13, 2026
நடிகை கனகாவின் புதிய PHOTO!

தனது தயாரின் மறைவுக்கு பிறகு நடிகை கனகா உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அவர் நலிவுற்றிருந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களை சோகமடைய செய்தது. இந்நிலையில், அண்மையில் நடிகை கனகா, நடிகர் ராமராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், கரகாட்டக்காரன் காம்போ மீண்டும் வருமா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


