News November 18, 2024

சக ஊழியருக்காக நிதி திரட்டிய காவலர்கள்; எஸ்.பி பாராட்டு

image

சிவகங்கை மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்தில் சிவகங்கையைச் சோ்ந்த பி.முத்துக்கிருஷ்ணன்(37) பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 8.6.2024 அன்று பணியிலிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, இவருடன் கடந்த 2009இல் காவல் துறையில் பணியில் சேர்ந்த சக காவலா்கள் ஒருங்கிணைந்து ரூ.24,48,893 நிதியாகத் திரட்டி நவ.17 முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் கொடுத்தனர். சிவகங்கை எஸ்.பி காவலர்களை பாராட்டினார்.

Similar News

News December 10, 2025

சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததால் சிறுவன் உயிரிழப்பு

image

மூங்கில் ஊரணி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் 17 வயது மகன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை ஹைவே வழியாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நாய் ஒன்று வாகனத்தின் முன் குறுக்கே வந்ததால் அவர் திடீர் பிரேக் அடித்ததில் வாகனம் சமநிலை இழந்து அருகிலிருந்த இரும்பு படிக்கட்டில் மோதியதில் காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்

News December 10, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு <>க்ளிக் செய்து<<>> ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

சிவகங்கை: வேலை இல்லையா.? அரசு வழங்கும் நிதியுதவி.!

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!