News November 19, 2024

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி

image

அரியலூர் சமூக நலத்துறையின் கீழ் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மைய நிர்வாகி, வழக்குப் பணியாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இப்பணியிடத்திற்கு வருகிற டிச-03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News December 5, 2025

அரியலூர்: ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

தமிழக ஆளுநர் ரவி, தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாசிலை அருகே நடந்த போராட்டத்துக்கு விடுதலை நீலமேகன் தலைமை வகித்தார். சுபா.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வி திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆளுநரின் பேச்சைத் தீவிரமாக எதிர்த்தனர்.

News December 5, 2025

அரியலூர்: கர்நாடக MLA தமிழக அமைச்சரை சந்திப்பு

image

அரியலூர், பெரம்பலூர்-கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கர்நாடக மாநில மின்சார வாரிய தலைவரும், உஸ்கோட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பச்சேகௌடாவை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் சுற்றுலா மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

News December 5, 2025

அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!