News August 23, 2025

க.குறிச்சி: வீட்டில் இருந்தே வரி செலுத்த புதிய வழி

image

கள்ளக்குறிச்சி மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

Similar News

News January 17, 2026

கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

image

நயினார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவருடைய மனைவி தவமணி (39) உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில், தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் தவமணி கூறியுள்ளார். அவரோ, வங்கிக்கு சென்று வந்தவுடன் கூட்டிச் செல்கிறேன் எனக்கூறி சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தவமணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: பீகார் கொள்ளையர்களால் அதிர்ச்சி!

image

சின்னசேலம்: வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம், பீகாரைச் சேர்ந்த 3 பேர் வீட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கு ஏதும் இல்லாத நிலையில், பக்கத்து வீடான காமராஜ் என்பவரது வீட்டின் மொட்டைமாடி வழியாக உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது காமராஜ் மனைவி கூச்சலிட்டதால், 3 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசையால் முதியவர் தற்கொலை!

image

மணலூர்பேட்டையை சேர்ந்த கண்ணன் (68), தனது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகன் அவரது வயதை காரணம் காட்டி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!