News November 3, 2025

கோவை: B.E / B.Tech படித்திருந்தால் ரூ.40,000 சம்பளம்!

image

கோவை மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 14.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 9, 2025

கோவை அருகே வாய்க்காலில் பெண் சடலம்!

image

சுல்தான்பேட்டை போகம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி(35). இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ (3)என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், மகேஸ்வரி தனது குழந்தையை அழைத்து கொண்டு மாயமானார். இந்நிலையில் மகேஸ்வரியின் சடலம் அவிநாசிபாளையத்தில் பிஏபி வாய்க்காலில் மீட்கப்பட்டுள்ளது. அவர் அழைத்து சென்ற அவரது குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!