News December 10, 2025
கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

கோவை வால்பாறையை சேர்ந்த இளைஞர் கார்த்திக், ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள சகோதரி ஐஸ்வர்யா வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால், உரிய வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
கோவை: திருமணம் ஆன 12-வது நாளில் பெண் தற்கொலை

பல்லடத்தைச் சேர்ந்தவர் ஜீவிதா(25). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். இவருக்கும் கோவை தென்னமநல்லூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அபிஷேக்குக்கும் பழக்கமாகி காதலாகி கடந்த 12 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஜீவிதா மருத்துவம் படித்திருந்தாலும் உரிய வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (24.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.