News October 20, 2025
கோவை: வங்கிச் சேவை இனி வாட்ஸ்அப்பில்!

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை; கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போதும். தேவையான அனைத்து விவரங்களும் வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும். SBI 90226 90226, கனரா வங்கி 90760 30001, இந்தியன் வங்கி (Indian Bank) 87544 24242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 96777 11234, HDFC Bank 70700 22222 : இதனை மற்றவர்களும் ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
தபால் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை தபால் பிரிவின் அரையாண்டு ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் (டிசம்பர் 30) அன்று காலை 11 மணிக்கு கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய குறைகள் உள்ளோர் மனுக்களை (டிசம்பர் 20)-க்குள் சீனியர் சூப்பிரண்டு, கோவை – 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு விருது

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி பணிகளுக்கான நிதியினை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியிடம் இன்று வழங்கினார்.
News December 6, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடிகரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மஞ்சேஷ்(42), ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியார் வங்கியில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மஞ்சேஷ் வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பெண் பணத்தை எடுத்து கொண்டு முதல் கணவருடன் ஓடியுள்ளார். மனமுடைந்த மஞ்சேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


