News August 5, 2024

கோவை மேயர்: யார் இந்த ரங்கநாயகி?

image

கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கியமாக பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர குற்ற சம்பவங்கள் மற்றும் போதை பொருட்கள் நடமாடத்தை குறைக்க கூடுதல் போலீசாரும் மப்டியில் உலா வர உள்ளனர்.

News January 13, 2026

கோவை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

News January 13, 2026

உக்கடம் அருகே தந்தை, மகளுக்கு கத்திக்குத்து

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிபானா(24) என்பவர் நேற்று வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரிபானாவின் தந்தையை கத்தியால் குத்தினர். இதனைத் தடுக்க முயன்ற ரிபானாவையும் கத்தியால் குத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!