News March 27, 2024
கோவை மாவட்டத்தில் மொத்தமாக 103 வேட்பு மனுக்கள் தாக்கல்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்.20 ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடம் பெறப்பட்டன. இன்று (ஏப். 27) மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. கோவை மாவட்டத்தில் கோவையில் 59 மனுக்களும், பொள்ளாச்சியில் 44 மனுக்களும் இன்று வரை பெறப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப். 28) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 16, 2026
கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
பரளிக்காடு சுற்றுலா! உடனே APPLY பண்ணுங்க!

மேற்குதொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணை, வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், வார இறுதி நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலா வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <


