News October 13, 2025
கோவை மலைக்கோயிலில் பதறிய பக்தர்கள்!

கோவை தீத்திப்பாளையம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் குன்று மலையில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது, பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அங்கிருந்த மலை தேனீக்கள் கொட்டியதில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் வீடு திரும்பினர்.
Similar News
News December 6, 2025
ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு விருது

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னூர் ஒட்டர்பாளையம் ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி வளர்ச்சி பணிகளுக்கான நிதியினை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியிடம் இன்று வழங்கினார்.
News December 6, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை இடிகரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மஞ்சேஷ்(42), ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் தனியார் வங்கியில் ரூ.80,000 கடன் பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மஞ்சேஷ் வேலைக்கு சென்ற நேரத்தில், அப்பெண் பணத்தை எடுத்து கொண்டு முதல் கணவருடன் ஓடியுள்ளார். மனமுடைந்த மஞ்சேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.