News April 1, 2025
கோவை நிலுவை வரியை வசூலிக்க கமிட்டி

கோவை மாநகராட்சியில் சொத்து வரி ₹129.43 கோடி உட்பட மொத்தமாக பல்வேறு வரிகளில் ₹667.77 கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலுவை வரியினங்களை ஆய்வு செய்வதற்கும், வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்து வசூலிப்பதற்கு சிறப்பு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 15, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
கோவை: வெறிநாய் தொல்லையா..? உடனே CALL!

தெருநாய் கடியால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (ஜன.14) மீண்டும் ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 29-வது மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.


