News November 30, 2024
கோவை நான்கு வழிச்சாலை பணி: 1,400 மரங்களை அகற்ற முடிவு

மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி வரையிலான 38 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.250 கோடி மதிப்பில், நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டப் பணிக்காக மேட்டுப்பாளையம் – அவினாசி வழித்தடத்தில் உள்ள ஏறத்தாழ 1,400 மரங்கள் அகற்றப்பட உள்ளன. அகற்றப்படும் மரத்துக்கு ஏற்ப பத்து மடங்கு மரங்கள் புதிய இடத்தில் நடவு செய்து வளர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.

தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.