News November 22, 2024

கோவை: தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி (26.11.2024 மற்றும் 27.11.2024) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 15, 2025

கோவை அருகே அதிரடி கைது!

image

சூலூரைச் சேர்ந்த பிரியா என்பவர் நேற்று முந்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்துச் சூலூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகவன் (24) மற்றும் ஜெகதீஸ் (31) ஆகிய இருவரையும் நேற்று (நவ. 14) கைது செய்தனர்.

News November 15, 2025

கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’. நிகழ்ச்சி

image

கோவை மாநகரில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. அதன்படி, வரும் (நவம்பர்.16) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின சிறப்பு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News November 15, 2025

கோவையில் மாஸ்டர்ஸ் தடகள போட்டி

image

கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் 30ம் தேதி தடகளப் போட்டி நடக்கிறது. இதில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 30 வயதில் இருந்து 80 வயதுக்கும் மேற்பட்டோர் என, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம், மேலும் விபரங்களுக்கு 98432 21711 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!