News February 23, 2025
கோவை: கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் இன்று புவியியல், சுரங்கத்துறை சிறப்பு உதவி ஆணையர் கணேசன் தலைமையிலான கனிமவளத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டதில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
கோவை: இன்று இப்பகுதியில் மின்தடை

கோவையில் பெரியநாயக்கன் பாளையம், மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் இன்று(ஜூலை.8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News July 7, 2025
கோவை:இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கோவை: கட்சி நிர்வாகிகளிடம் பிக் பாக்கெட்

மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இபிஎஸ் இன்று சாமி தரிசனத்திற்கு பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதிமுக காரமடை ஒன்றிய பொருளாளர் தங்கராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம், நெல்லித்துறை ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சம் என ரூ.2 லட்சத்தை மர்ம நபர், பிக் பாக்கெட் அடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.