News April 6, 2024

கோவை: ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசு, தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு விடுமுறை தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தொழிலாளர் நலத்துறை கட்டுப்பாடு அறைக்கு 94453-98752, 0422-2241136, 99426-64066 தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 11, 2026

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு, உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

கோவை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

கோவை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

கோவை வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!