News May 3, 2024
கோவை: இரு புரோக்கர்கள் கைது

கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று லட்சுமி மில்ஸ் ஜங்ஷனில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பெண்கள் தங்களிடம் இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் அழைத்துள்ளனர். இப்புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர்களான திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த சகுந்தலா, மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்த கவிதா ஆகிய இருவரை கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
கோவை எம்பியின் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ரூ.6.41 கோடி மதிப்பில் முடிவற்ற பணிகளை துவக்கி வைக்கவும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்க உள்ளனர் என மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
கோவை சம்பவம்: செல்போன் ஆய்வு

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின் சதீஷ், கார்த்திக் மற்றும் குணா ஆகியோரது கைப்பேசிகளை, வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பதை அறிவதற்காக காவல்துறை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. தற்போது கைதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


