News September 30, 2025

கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கோவை சுகாதார பணிகள் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில், பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருபவர் பரணிதரன். இவர் நேற்றிரவு காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி, தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அதி வேகத்தில் சென்ற சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

image

கோவை வால்பாறையை சேர்ந்த இளைஞர் கார்த்திக், ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள சகோதரி ஐஸ்வர்யா வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால், உரிய வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

கோவை செம்மொழி பூங்கா: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

image

கோவை செம்மொழி பூங்கா நாளை (டிச.11) திறக்கப்படவுள்ள நிலையில் நுழைவு கட்டண விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ஒருவருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10வயது) ரூ.5 நடைபாதை உபயோகிப்போருக்கு ஒருவருக்கு(மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு ரூ.25,000 குறும்பட ஒளிப்பதிவு, இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

News December 10, 2025

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!