News September 29, 2025
கோவை அருகே செல்போனை பறித்த நால்வர் கைது

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக பணிபுரிந்து வரும் சித்தராஜ் கடந்த 26 ஆம் தேதி, கடை முன்பு நின்றிருந்த போது அங்கு வந்த 4 பேர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்து சென்றனர். இப்புகாரின் பேரில் இன்று சச்சின்@நவீன் குமார், பிபின் பிரசாத், கவி@கர்ணன், தட்சிணாமூர்த்தி ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 14, 2025
அன்னூரில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்!

அன்னூரில் முறையற்ற உறவு வெளியே தெரிந்ததால் மூதாட்டியை கொலை செய்து இயற்கை மரணமடைந்ததாக நாடகமாடிய நாகேஷ் – ஜாய் மெட்டில்டா ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மயிலாத்தாளின் சடலம் நேற்று கோவை ஜிஎச் பேராசிரியர் மனோகரன், தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முக்கிய பாகங்கள் எடுத்து செல்லப்பட்டன.
News November 14, 2025
கோவை: உள்ளூரில் வேலை வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் HRH Next Service Company நிறுவனத்தில் Customer Service Associate (வாடிக்கையாளர் சேவை அதிகாரி) பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ரூ.7,500 முதல் ரூ.14,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி (அ) டிப்ளமோ முடித்தவர்கள் நவ.30ம் தேதிக்குள் <
News November 14, 2025
BREAKING கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், டவுன்ஹால் மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அங்குலம்,அங்குலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்


