News May 14, 2024
கோவை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 4ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.64% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.99 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.76 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த ஏர் அரேபியா விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உடமைகளுடன் வந்த பயணி ஒருவர் கண்ணாடியை உடைத்து, தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற வரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை CISF உதவியுடன் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.


