News November 29, 2024
கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு புயல் மழை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கோவையில் டிச.1,2 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு (ம) மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை, கோவையில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது 1977க்கு பிறகு, முதல் முறையாக வரும் புயல் மழை என்றும் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் எச்சரித்துள்ளார். வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால், நீலகிரிக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 12, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மேட்டுப்பாளையம் அடுத்த வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ மனோகரன். இவர் நேற்றிரவு சிறுமுகையில் இருந்து பணி முடித்து விட்டு பாலப்பட்டி வழியாக டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலப்பட்டியில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற பிக்கப் வாகனத்தின் மீது டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில், ராஜ மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, உடையாம்பாளையம், சர்க்கரசமக்குளம், கோவில்பாளையம், குரும்பகாபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 12, 2025
சாக்கடையில் வீசப்பட்ட குழந்தை: கோவையில் கொடூரம்!

சூலூர் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பிறந்து சில மணி நேரங்களை ஆன குழந்தையை மர்ம நபர்கள் சாக்கடையில் வீசிச் சென்றனர். உயிருடன் இருந்த குழந்தையை அப்பகுதியினர் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர். மனசாட்சி இல்லாத இந்த செயலை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


