News November 15, 2025
கோவையில் மாஸ்டர்ஸ் தடகள போட்டி

கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் 30ம் தேதி தடகளப் போட்டி நடக்கிறது. இதில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 30 வயதில் இருந்து 80 வயதுக்கும் மேற்பட்டோர் என, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம், மேலும் விபரங்களுக்கு 98432 21711 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
கோவை அருகே சோகம்: இளம்பெண் தற்கொலை!

சிறுமுகை பெரியூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(27) மீன்பிடி தொழிலாளி. இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் மாலை அணிந்துள்ளதால் பாட்டி வீட்டில் நேற்றிரவு உறங்கியுள்ளார். நேற்று காலை வந்தபோது, புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருவதோடு, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகாததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கோவை மக்களே: இன்று இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பிஎஸ்ஜி எஸ்டேட் (ம) மருத்துவமனை, பீளமேடுபுதூர், புலியகுளம், பங்கஜாமில், பாரதிபுரம், செளரிபாளையம், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், அக்ரகார சாமக்குளம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.