News July 16, 2024
கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Similar News
News July 9, 2025
கோவை: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News July 9, 2025
கோவை: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007876>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.