News July 15, 2024

கோவையில் காலை உணவு திட்டம் துவக்கம்

image

காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, கோவை  தென்னமநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில்  காலை உணவு திட்டத்தை திமுக மாவட்ட செயலாளர் தொ.அ ரவி இன்று துவக்கி வைத்தார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News July 8, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில்!

image

கோவை உக்கடத்தில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். கடன் தொல்லையில் சிக்கியுள்ள உங்கள் நண்பர்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News July 8, 2025

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 1,800 பேர் விண்ணப்பம்

image

கோவை மாவட்டத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் உட்பட 1,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 30 ஸ்கிரைப் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் திருட்டு போன்ற மோசடிகளை தடுக்க வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!