News August 21, 2024
கோவையில் ஒரே நாளில் 86 மனுக்கள் மீது விசாரணை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் மனுக்கள் மீது மறு விசாரணை இன்று நடைபெற்றது. இன்று ஒரே நாளில் 86 மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 14, 2025
காவலன் செயலி பதிவிறக்கம் செய்தால் வெள்ளி இலவசம்!

காவலன் செயலி குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையைச் சேர்ந்த தனியார் நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீனிவாசன் புதிய திட்டத்தை அறிவித்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதன்படி வெள்ளி நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்த பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால் ஒரு கிராம் வெள்ளியை இலவசமாக வழங்கி வருகிறார். இச்செயல் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
News November 14, 2025
கோவை: மக்கள் வெளியே நடமாட வேண்டாம்!

கோயம்புத்தூர் அருகே உள்ள ஆனைமலை பாசிபைத்தான்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்தது. இதனால் மேலும் ஒரு கூண்டு நேற்று கொண்டு வரப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டது. எனினும் சிறுத்தை பிடிக்கும் வரை மாலை 6 மணிக்கு மேல் மக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம். நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவித்துள்ளது.
News November 14, 2025
கோவை: மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்!

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், மனைவி மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கடந்த (அக்.28) ஆம் தேதி கொலை செய்து தடாகம் போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் தான் கொலை செய்ய வைத்ததாக தெரிய வந்தது. பின் போலீசார் கவி சரவணகுமாரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


