News August 6, 2024
கோவையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை மாவட்டம் காளாம்பாளையத்தில் கடந்த 3ம் தேதி சாலை விபத்தில், சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது தாய் தந்தையர் ஸ்ரீ ராமின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் இன்று தானமாக வழங்கினர். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் உடல் நாளை காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Similar News
News January 18, 2026
கோவையில் 5 பேர் கொண்ட கும்பல் கைது!

கோவை, நல்லம்பாளையத்தில் உயர் ரக போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீஸாா் நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் இடையா்பாளையத்தைச் சோ்ந்த அஜய், மணிகண்டன், விசாகன், அப்பாஸ், தனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்து 130 கிராம் மெத்தபெட்டமைன், காா், கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
News January 18, 2026
கோவை அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்!

கோவை போத்தனூரை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை மறித்த இளைஞர் ஒருவர் தன்னிடம் இளம்பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். பணம் எடுத்து வருவதாக கூறிய இளைஞர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் புரோக்கர் உதயகுமாரை கைது செய்தனர்.
News January 17, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (17.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


