News August 6, 2024
கோவையில் இன்று மின்தடை

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் முழு நேர மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
சிறுமுகை அருகே கோர விபத்து: ஒருவர் பலி

சிறுமுகை உளியூர் பகுதியைச் சேர்ந்த பாரதி, ராமசாமி மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் ஒரே பைக்கில் விஎன்கே தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில், பாரதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 24, 2026
வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ‘தென்கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த மலை யாத்திரைக்கு, இந்த ஆண்டு பிப்.1-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)


