News November 30, 2024
கோவையில் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

கோவை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவசர கட்டுப்பாட்டு மைய எண் – 0422 – 2302323 என்ற எண்ணிலும், வாட்ஸ் அப் எண் – 81900-00200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் மண்டலம் வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
கோவை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 11, 2025
கோவை: பெண்ணின் ஆசை வார்த்தையால் நேர்ந்த நஷ்டம்

கோவையை சேர்ந்த 45 வயது தொழிலதிபரை சில மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டு பேசிய இளம்பெண் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் ரூ.1.20 கோடி முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து அவரது கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டதாக SMS வந்தது. ஆனால், அதை அவர் எடுக்க முடியவில்லை. இதில் சந்தேகமடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


